பிள்ளையார் சுழி
Posted by மகேஷ் மேல் நவம்பர் 23, 2008
சீதக்களப செந்தாமரைப் பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாட
இந்த வரிகளுடன் தொடங்கும் விநாயகர் அகவலை நான் படித்த போது எனக்கு வயது ஏழு இருக்கும். திருநெல்வேலி NGO Colony பிள்ளையார் கோவிலில் ஒரு ஸ்லோகப் போட்டி அறிவித்திருந்தார்கள். மூன்று ஸ்லோகங்கள் – விநாயகர் அகவல், சகலகலாவல்லி மாலை மற்றும் சிவபுராணம் – இவற்றை தவறின்றி பாடவேண்டும். சுமார் ஒரு மாதம் நேரம் இருந்ததால் அம்மா ஒரு எளிமையான முறையை சொல்லித் தந்தார். தினமும் காலையும் மாலையும் இந்த ஸ்லோகங்களை ஸ்வாமி படத்திற்கு முன் சொல்ல வேண்டும். மற்றபடி மனப்பாடம் என்று ஒன்றும் செய்யவில்லை. அந்த போட்டியில் வென்றது மட்டுமல்லாது இன்று வரை இந்த மூன்று ஸ்லோகங்களும் எனக்கு மறக்கவே இல்லை.
இடையில் பல ஆண்டுகள் இவற்றை சொல்லாத போதும் – சமீபத்தில் சொல்ல ஆரம்பித்து விட்டேன். இந்த மூன்று ஸ்லோகங்களும் எனது மனதிற்கு என்றுமே அருகில் இருப்பவை.
நமச்சிவாய வாழ்க
நாதன் தாழ் வாழ்க